71
தமிழில் புதிய படைப்புகள் வெளிவருவதையும், சிறந்த நூல்கள் வெளிவருவதை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழக அரசால் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் தமிழ் இலக்கியச் சூழல் மேலும் செழிப்படைகிறது.
பரிசுக்கான வகைப்பாடுகள்
பின்வரும் 33 வகைப்பாடுகளில் நூல்கள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு வகைப்பாட்டிலும் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நூலின் ஆசிரியருக்கு ரூ.30,000/- பரிசுத் தொகையும், சான்றிதழும் வழங்கப்படும். மேலும், அந்த நூலை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கு ரூ.10,000/- பரிசுத் தொகையும், சான்றிதழும் வழங்கப்படும்.
வகைப்பாடுகளின் பட்டியல்:
- சிறுவர் இலக்கியம்
- மரபுக்கவிதை
- புதுக்கவிதை
- புதினம்
- சிறுகதை
- நாடகம் (உரைநடை, கவிதை)
- திறனாய்வு
- மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம்
- பிற மொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்
- நுண் கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்)
- அகராதி, கலைக்களஞ்சியம், கலைச்சொல்லாக்கம், ஆட்சித் தமிழ்
- பயண இலக்கியம்
- வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு
- நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிகவழிகளும், அகழாய்வு
- கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல்
- பொறியியல், தொழில் நுட்பவியல்
- மானுடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல்
- சட்டவியல், அரசியல்
- பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல்
- மருந்தியல், உடலியல், நலவியல்
- தமிழ் மருத்துவ நூல்கள் (சித்த மருத்துவம், ஆயுர்வேதம்)
- சமயம், ஆன்மிகம், அளவையியல்
- கல்வியியல், உளவியல்
- வேளாண்மையியல், கால்நடையியல்
- சுற்றுப்புறவியல்
- கணினியியல்
- நாட்டுப்புறவியல்
- வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம்
- இதழியல், தகவல் தொடர்பு
- பிற சிறப்பு வெளியீடுகள்
- விளையாட்டு
- மகளிர் இலக்கியம்
- தமிழர் வாழ்வியல்